பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம். மாட்டுவண்டியில் வந்தவர்களை தடுத்ததால் பரபரப்பு

இடங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலசபாக்கத்தில் மாட்டுவண்டியுடன் வந்தவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-12 17:13 GMT
திருவண்ணாமலை

ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்கா எதிரில் பெட்ேரால், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கொடியை சைக்கிளில் கட்டி வைத்துக் கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் வெற்றிசெல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கதிர்காமன், வெங்கடேசன் மற்றும் பலர்  கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் சைக்கிளில் ஊர்வலம் செல்ல முயன்றனர். அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முடிவில் மகிளா காங்கிரஸ் தலைவர் வினோதினி சக்திவேல் நன்றி கூறினார்.

கலசபாக்கம்

கலசபாக்கத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையொட்டி கலசபாக்கம் காப்பலூர் கூட்ரோடிலிருந்து பஜார் வீதி வரை மாட்டு வண்டியில் அவர்கள் கியாஸ் சிலிண்டரை வைத்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். அப்போது கலசபாக்கம் போலீசார், அனுமதி பெறாமல் இப்படி ஊர்வலமாக வருவதற்கு அனுமதி இல்லை என மாட்டுவண்டி ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் கட்சியினருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்