கூரியர் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் திருட்டு

கூரியர் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் திருட்டு

Update: 2021-07-12 17:08 GMT
ஊட்டி

குன்னூர் அருகே பெட்போர்டு பகுதியில் தனியார் கூரியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. 

உள்ளே சென்று பார்த்த போது, வாடிக்கையாளர்களுக்கு பார்சல் வினியோகம் செய்த பொருட்களுக்கான தொகை ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் வங்கியில் செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்த பணம் திருட்டு போனது தெரியவந்தது. 

இதுகுறித்து மேல் குன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். கண்காணிப்பு கேமராவில் ஏதேனும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் சோதனை செய்தனர். கூரியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்