கொரோனாவுக்கு மூதாட்டி பலி

கொரோனா பாதித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். புதிதாக 35 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

Update: 2021-07-12 16:48 GMT
சிவகங்கை,

  கொரோனா பாதித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். புதிதாக 35 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

35 பேருக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது இடங்களில் முககவசம் இல்லாமல் பொதுமக்கள் நடமாடுகிறார்களா? வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா? என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
 இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 483 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 39 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

மூதாட்டி பலி

இதற்கிடையே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 63 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

மேலும் செய்திகள்