ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள்; போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்

தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் ஏழைகளுக்கு நிவாரண பொருட்களை, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்.

Update: 2021-07-12 16:48 GMT
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டியில் அனைத்து சமுதாய அன்பு உறவு குழு மூலமாக கொரோனா கால நிவாரணமாக 200 பயனாளிகளுக்கு 10 கிலோ அரிசி பை மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திருவள்ளுர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாலை, அத்திமரபட்டி ஊர் பிரமுகர்கள் ஜோதிமணி, நம்மையாழ்வார், அகஸ்டின்,அழகுராஜா, தானியேல், கிருபானந்தம், மதியழகன், ராஜேந்திரபூபதி உள்பட பலர்்கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்