குளத்தில் மூழ்கி அண்ணன் தம்பி சாவு

அரகண்டநல்லூர் அருகே குளத்தில் மூழ்கி அண்ணன் தம்பி சாவு

Update: 2021-07-12 16:42 GMT
திருக்கோவிலூர்

அரகண்டநல்லூர் அருகே உள்ள கொடுங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 40) விவசாயி. இவருடைய மகன்கள் தினேஷ்குமார்(12), அஸ்வின்குமார்(11). இவர்கள் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜேந்திரன் அவரது மனைவியுடன் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விழுப்புரம் அருகே உள்ள திருக்கனூர் கிராமத்துக்கு சென்றார். 2 மகன்களும் வீட்டில் இருந்தனர். 

பின்னர் மாலையில் வீடு திரும்பிய ராஜேந்திரனும் அவரது மனைவியும் 2 மகன்களையும் காணாமல் அவர்களை தேடினர். அப்போது அதே ஊரில் உள்ள குளத்தில் தினேஷ்குமார், அஸ்வின்குமார் இருவரும் பிணமாக மிதந்ததை பார்த்து கதறி அழுதனர். விசாரணையில் வீட்டில் இருந்த அண்ணன்-தம்பி இருவரும் குளத்தில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்