அரக்கோணம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

Update: 2021-07-12 16:39 GMT
அரக்கோணம்

அரக்கோணம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் நேற்று நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் முறையாக சம்பளம் வழங்க வேண்டும், பிடித்தம் செய்யப்படும் பி.எப். மற்றும் இன்சூரன்ஸ் பிடிதங்களை முறையாக செலுத்த வேண்டும், பணிக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அரக்கோணம் நகராட்சியில் 300-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்களை கோட்டங்களுக்கு இடையே பணியிட மாற்றம் செய்து உத்தரவு வழங்கிய அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

அவர்களுடன் நகராட்சி மேலாளர் கோபிநாத் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்