மோகனூர் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில சிறுவன் பலி
மோகனூர் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில சிறுவன் பலி
மோகனூர்:
மோகனூர் அருகே அணியாபுரத்தில் உள்ள ஒரு கோழிப்பபண்ணையில் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பீகார் மாநிலம் கிழக்கு கெம்ரான் மாவட்டம் புல்வார் உதாரி பகுதியை சேர்ந்த பிஜேத் (வயது 28) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய உறவினர் சுதீஸ் யாதவ் ஊரடங்கையொட்டி சொந்த ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுதீஸ் யாதவின் மகன் அங்குகுமார் (15) பிஜேத்துடன் தங்கி இருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கோழிப்பண்ணையில் மோட்டார் போட்டு தண்ணீர் அடித்து பண்ணையை சுத்தம் செய்தனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த சிறுவன் அங்குகுமார் மோட்டாருக்கு மின்சாரம் சென்ற வயர் மீது எதிர்பாராதவிதமாக மிதித்து விட்டதாக ெதரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் அங்குகுமார் இறந்தான். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.