பாப்பாரப்பட்டியில் டாஸ்மாக் கடை அருகே பிணமாக கிடந்த தனியார் பஸ் கண்டக்டர் கொலையா? போலீசார் விசாரணை

பாப்பாரப்பட்டியில் டாஸ்மாக் கடை அருகே தனியார் பஸ் கண்டக்டர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-07-12 15:56 GMT
பாப்பாரப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள நளப்பநாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 42). தனியார் பஸ் கண்டக்டர். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கோபால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் நேற்று காலை அவர் பாப்பாரப்பட்டி டாஸ்மாக் கடை அருகில் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாப்பாரப்பட்டி போலீசார் விரைந்து சென்று கோபாலின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோபால் கொலை செய்யப்பட்டாரா? என போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்