உடுமலையில், ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை பதிவு செய்வதற்காக காலை 7 மணிக்கே வந்து காத்திருக்கின்றனர்.

உடுமலையில், ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை பதிவு செய்வதற்காக காலை 7 மணிக்கே வந்து காத்திருக்கின்றனர்.

Update: 2021-07-12 15:50 GMT
உடுமலை, 
உடுமலையில், ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை பதிவு செய்வதற்காக பொதுமக்கள் காலை 7 மணிக்கே வந்து காத்திருக்கின்றனர்.
ஆதார் அட்டை
அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவது, வங்கி கணக்கு தொடங்குவது உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் ஆதார் அட்டை அத்தியாவசிய தேவையாக உள்ளது. தற்போது நலவாரியங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவித்தொகைகள் கிடைக்கிறது. இந்த உதவித்தொகையை பெறுவதற்கு நல வாரிய உறுப்பினர்கள், வங்கி கணக்கு தொடங்கும்போது ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை பதிவு செய்திருப்பது அவசியமாகிறது.
அதனால் ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை பதிவு செய்தல் மற்றும் ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல் ஆகியவற்றிற்கு உடுமலை தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் செயல்படும் ஆதார் சேர்க்கை மையத்திற்கு பொதுமக்கள் வருகை அதிகமாக உள்ளது.
அலைமோதும் மக்கள் கூட்டம்
இதன்காரணமாக இந்த ஆதார் மையத்தில் பொதுமக்கள் கூட்டம் தினமும் அலைமோதுகிறது. இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கே பொதுமக்கள் பலர் ஆதார் மையத்துக்கு வந்து காத்திருந்தனர். காலை 9.30 மணிக்கு ஊழியர்கள் வந்ததும் இந்த மையம் திறக்கப்பட்டு டோக்கன் கொடுக்கப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சென்று டோக்கன் வாங்கினர். 
இதைத்தொடர்ந்து ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை பதிவு செய்தல், உரிய ஆவணங்களின் படி திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. இந்த பணிகளை தாசில்தார் வி.ராமலிங்கம் ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்