சாராயம் விற்ற 2 பேர் கைது

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-12 14:47 GMT
சிக்கல்:

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரோந்து பணி

கீழ்வேளூர் போலீஸ்  இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கீழ்வேளூர் அருகே ராதாமங்கலம் - எறும்புகன்னி பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது  அங்குள்ள எறும்பு கன்னி வாய்க்கால்  பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் நின்ற  கொண்டிருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.  மேலும் அவர்களை பையை சோதனை செய்த போது அதில் சாராயம் இருந்தது தெரிய வந்தது.

 இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர்கள், வடக்காலத்தூர் பள்ளிகூட தெருவை சேர்ந்த மோகன் மகன் புருஷோத்தமன் (வயது 29). ஆந்தக்குடி, திருப்பஞ் சனம் கீழத்தெருவை சேர்ந்த  முருகேசன் ( 42) எனபதும், இவர்கள் காரைக்கால் பகுதியில்  இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

2 பேர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமன், முருகேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம்  இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்