கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

விருதுநகர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலியானான்.

Update: 2021-07-11 21:14 GMT
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள காமராஜர்புரத்தை சேர்ந்தவர் பாக்கிய ஜோதி (வயது51). இவரது மகள் சங்கீதா. அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் பாக்கிய ஜோதியின் வீட்டில் தங்கியிருந்தார். சங்கீதாவின் மகன் லியோன்(11). அவ்வப்போது கிராமத்தில் கிளி மற்றும் புறா பிடிக்க செல்வதாக கூறி செல்வான். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை லியோன் புறா பிடிக்க செல்வதாக கூறி சென்றான். பின்னர் அவன் வீடு திரும்பாத நிலையில் அவனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை அங்குள்ள ஒரு தனியார் தோட்டத்து கிணற்றில் சிறுவன் லியோனியின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் பாக்கியஜோதி அங்கு சென்று லியோனின் உடலை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுபற்றிய புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீசாரின் விசாரணையில் லியோன் புறா பிடிக்க சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்