ஈரோட்டில் சமூக இடைவெளியின்றி பஸ்களில் பயணிக்கும் பொதுமக்கள்

ஈரோட்டில் சமூக இடைவெளியின்றி பஸ்களில் பொதுமக்கள் பயணிக்கிறாா்கள்.

Update: 2021-07-11 21:13 GMT
ஈரோடு
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 மாதங்களாக பஸ் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கியது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலத்தில் உள்ள 14 கிளைகள் மூலம் 728 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில் தற்போது முதல் கட்டமாக 400-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தற்போது ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் பல்வேறு பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. 
இதனால் பயணிகள் நின்றபடி பயணம் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக சமூக இடைவெளி கேள்விக்குறியாகி உள்ளது. எனவே கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்