வீணாகும் குடிநீர்
அருப்புக்கோட்டை குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டுகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ெரயில்வே பீடர் ரோட்டில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வாருகாலில் கலந்து வருகிறது. குடிநீர் கழிவு நீருடன் கலந்து அப்பகுதியில் குளம்போல் தேங்கியுள்ளது. இந்த பகுதியில் குழாயில் குடிநீர் கசிவு இருப்பதாக நேற்று முன்தினம் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சரி செய்த ஒரே நாளில் குழாய் மீண்டும் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாக செல்வதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.