சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.332-க்கும் ஏலம்

சத்தியமங்கலம் மாா்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.332-க்கும் ஏலம் போனது.

Update: 2021-07-11 20:59 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 வரை செயல்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம், பெரியகுளம், சிக்கரசம்பாளையம், பண்ணாரி, கொத்தமங்கலம், ராஜன்நகர், புது பீர்கடவு, கே.என்.பாளையம், டி.ஜி.புதூர், அரசூர், இண்டியம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.332-க்கும், முல்லை ரூ.140-க்கும், காக்கடா ரூ.125-க்கும், செண்டுமல்லி ரூ.105-க்கும், பட்டுப்பூ ரூ.57-க்கும், ஜாதி மல்லி ரூ.375-க்கும், கனகாம்பரம் ரூ.260-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.

மேலும் செய்திகள்