மணல் கடத்திய வாலிபர் கைது

காரியாபட்டி அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-11 20:59 GMT
காரியாபட்டி, 
விருதுநகர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் காரியாபட்டி தோப்பூர் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்களை பிடிக்க கிழவனேரி கிராம நிர்வாக அதிகாரி கண்ணன், தேனூர் தலையாரி முனியசாமி ஆகியோர் தோப்பூர் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்தினர். அப்போது  மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்களும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காரில்  சோதனை செய்தபோது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும், காரை ஓட்டி வந்தவர் காரியாபட்டியை சேர்ந்த ராஜா முகமது (வயது 25) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காரை காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாமுகமதுவை ைகது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்