மேலும் 32 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-07-11 20:01 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,081 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44,039 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 
நேற்று மட்டும் 26 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 505 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைபடுத்தப் பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் 230 பேரும், சிகிச்சை மையங்களில் 11 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். 
நேற்று மாவட்ட பட்டியலில் 19 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மாநிலப் பட்டியலில் 32 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 1 ஆகும்.

மேலும் செய்திகள்