நாமக்கல் மாவட்டத்தில் புதியதாக 85 பேருக்கு கொரோனா 2 பேர் பலி

நாமக்கல் மாவட்டத்தில் புதியதாக 85 பேருக்கு கொரோனா 2 பேர் பலி

Update: 2021-07-11 19:28 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதியதாக 85 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
85 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 45 ஆயிரத்து 885 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 45,891 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று புதியதாக 85 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,976 ஆக அதிகரித்து உள்ளது.
2 பேர் பலி
இதற்கிடையே நேற்று 109 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 44 ஆயிரத்து 711 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 831 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 432 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலியாகினர். எனவே இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 434 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் செய்திகள்