வாகனம் மோதி தொழிலாளி சாவு
கடையநல்லூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே இடைகால் யாதவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கல்யாணி ஆசாரி (வயது 68). இவர் இடைகால் பகுதியில் தச்சு தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு தனது தச்சுப் பட்டறையில் தூங்குவதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கல்யாணி ஆசாரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.