பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் குவிந்த பொதுமக்கள்

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நேற்று பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2021-07-11 19:01 GMT
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நேற்று பொதுமக்கள் குவிந்தனர்.

பாபநாசம் கோவில்

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பாபநாசம் கோவில், கொரோனா ஊரடங்கின் காரணமாக அடைக்கப்பட்டு, கோவில் முன்பு அமைந்துள்ள படித்துறை ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வாக கடந்த வாரம் முதல் கோவில்களில் சாமி தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்ததையடுத்து பல்வேறு பகுதிகளில் கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்

விடுமுறை நாளான நேற்று பாபநாசம் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் கொரோனா தொற்றை கண்டுகொள்ளாமல் கோவில் முன்பு அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றுப்படித்துறை பகுதியில் குளித்து மகிழ்ந்தனர்.

மக்கள் கூட்டம் அதிகமானதையடுத்து பாபநாசத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் செய்திகள்