கார் மோதி பனியன் கம்பெனி ஊழியர் பலி
கார் மோதி பனியன் கம்பெனி ஊழியர் பலியானார்.;
க.பரமத்தி
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள செங்காட்டுபட்டியைச் சேர்ந்த சத்யராஜ் (வயது 32). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் அவரது மனைவி வாசுகி (24), மகள் தனுசியா (4) ஆகியோரை அழைத்து கொண்டு, திருப்பூரை நோக்கி கரூர்-கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். க.பரமத்தி அடுத்த காட்டுமுன்னூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிளில் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சத்யராஜ், வாசுகி, தனுசியா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்குப்பதிந்து, காரை ஓட்டி வந்த தஞ்சாவூர் மாவட்டம், நாச்சி கோட்டையை சேர்ந்த ராஜேந்தர் (42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறா