மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி படுகாயம் அடைந்தவர் சாவு

நொய்யல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி படுகாயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2021-07-11 18:50 GMT
நொய்யல்
லாரி மோதல்
நொய்யல் அருகே சேமங்கி பெரியார் நகரை சேர்ந்த சேதுராமன் (வயது 22). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் தமிழ்வேந்தன் (38). இவர்கள் இருவரும் மளிகை சாமான்கள் வாங்கி வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனா். 
மோட்டார் சைக்கிளை தமிழ்வேந்தன் ஓட்டி வந்தார். அப்போது நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் மூட்டைகளை ஏற்றிவந்த சரக்கு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தமிழ்வேந்தன், சேதுராமன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 
சாவு
இதையடுத்து படுகாயம் அடைந்த அவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தமிழ்வேந்தன் மட்டும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்