ஆவூர் அருகே மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோவில் கைது

மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-07-11 18:17 GMT
ஆவூர்:
விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே உள்ள அவ்வையார்பட்டி கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது  மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமானார். மாணவியின் பெற்றோர் பல இடங்களில் அவரை தேடிப்பார்த்தும் காணாததால், இதுகுறித்து மண்டையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். போலீசாரின் விசாரணையில், அவ்வையார்பட்டி அருகே உள்ள ஆம்பூர்பட்டிநால்ரோடு பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் மனோஜ்குமார் (வயது 20) என்பவர் மாணவியை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் கடத்தி சென்று மாத்தூர் அருகே உள்ள ராசிபுரத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பள்ளி மாணவியை கடத்திச் சென்று, திருமணம் செய்ய முயன்றதாக மனோஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்