விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர் சாவு

விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர் சாவு

Update: 2021-07-11 18:09 GMT
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிதாசன் மகன் ஆஸ்டின்(வயது 22). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். 
தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்தார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆஸ்டின் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி அடுத்த கோவளம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். கோவளம் மின்வாரிய அலுவலகம் பகுதியில் சென்றபோது,  பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. 
இதில் தூக்கி வீசப்பட்ட ஆஸ்டின் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை ஆஸ்டின் பரிதாபமாக இறந்தார்.

மேலும் செய்திகள்