வாலிபர் கொலை வழக்கில் 7 பேர் கைது

வாலிபர் கொலை வழக்கில் 7 பேர் கைது;

Update: 2021-07-11 17:37 GMT
மதுரை
மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே உள்ள வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்து முனியாண்டி (வயது 37). பெயிண்டராக வேலை செய்து வந்த இவர் சொத்து தகராறில் தந்தையை கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், ஜாமீனில் வந்த முத்துமுனியாண்டியை நேற்றுமுன்தினம் மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இதனை தொடர்ந்து பெருங்குடி போலீசார் கொலை செய்யப்பட்ட முத்துமுனியாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கும், முத்துமுனியாண்டிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த வைரமுத்து(20), லட்சுமணன்(32), முத்துகுமார்(23), சிவா, பொன்முருகன் (23), வினோத்(23), கருப்புசாமி(23) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்