சிறுமியை பலாத்காரம் செய்த வடமாநில தொழிலாளி கைது

ஊட்டி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வடமாநில தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-07-11 17:29 GMT
ஊட்டி

ஊட்டி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வடமாநில தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

வடமாநில தொழிலாளி 

மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ்தர்ஜ் (வயது 41). தொழிலாலி யான இவர் ஊட்டி அருகே முட்டிநாடு கிராமத்தில் தங்கி இருந்து கேரட் அறுவடை போன்ற தோட்ட பணிகளுக்கு சென்று வந்தார்.

 இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 7-ந் தேதி வேலைக்கு சென்று திரும்பி வரவில்லை. 

இதனால் பெற்றோர் சிறுமியை காணவில்லை என்று லவ்டேல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

போக்சோவில் கைது 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த சிறுமியை சுரேஷ்தர்ஜ் கோவைக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

  இதையடுத்து போலீசார் சுரேஷ்தர்ஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

அவர் கடத்தி வைத்திருந்த அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்