பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

காரைக்குடியில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-11 17:19 GMT
காரைக்குடி,

காரைக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 32). இவர் கோட்டையூரைச் சேர்ந்த நிவேதா என்பவரிடம் கடன் பெற்றிருந்தார்.
அதனை குறிப்பிட்ட காலத்தில் திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் நிவேதா மற்றும் செஞ்சையை சேர்ந்த முத்துலட்சுமி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கீழத்தெருவை சேர்ந்த கார்த்தி மற்றும் மணிகண்டன் ஆகியோர் மகாலட்சுமி வீட்டுக்கு சென்று அவரை ஆபாசமாக பேசி கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.
பின்னர் கத்தியால் அவரை வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். மேலும் நிவேதாவிற்கு கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கார்த்தி, மணிகண்டன், நிவேதா, முத்துலட்சுமி ஆகியோர் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக கார்த்தியை (31) கைது செய்தனர்.

மேலும் செய்திகள்