குப்பை, கோழி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

கமுதி பேரூராட்சியில் குப்பை, கோழி கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-07-11 16:42 GMT
கமுதி, 
கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் அகற்றப்படாத நிலையில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பேரூராட்சி உயர்அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல பகுதிகளில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இது சம்பந்தமாக கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட பொது சேவை நிறுவனங்கள் சார்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், சிவகங்கை மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் மற்றும் உயர் அதிகாரியிடம் மனு அனுப்பப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்