ராமநாதபுரம்,
ராமநாதபுரம் வள்ளல் பாரி தெற்குதெரு பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் என்பவரின் மகன் ராமதாஸ் (வயது 42).தச்சுத் தொழில் செய்து வருகிறார்.இவர் சிகில்ராஜவீதி பகுதியில் உள்ள கடையில் மர வேலை பார்த்து கொண்டிருந்தபோது அறுவை எந்திரத்திற்கு மின் இணைப்பு கொடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து அவருடைய மனைவி முத்துவைரம் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.