கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா

கயத்தாறு தாலுகா கட்டாலங்குளம் கிராமத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

Update: 2021-07-11 15:56 GMT
கயத்தாறு:
கயத்தாறு தாலுகா கட்டாலங்குளம் கிராமத்தில் வீரன் அழகுமுத்துக்கோனின் 311வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அழகுமுத்துக்கோனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் கயத்தாறு மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வினோபாஜி, மாவட்டஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆசூர் காளிபாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, ராமச்சந்திரன் மற்றும் கோவில்பட்டி நகர, ஒன்றிய, பிற அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு அழகுமுத்துக்கோனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், கோவில்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா நேற்று கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில்  ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி லெனின் நகரில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக வீரன் அழகுமுத்துக்கோன் புகழ் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். செயலாளர்  பெஞ்சமின் பிராங்க்ளின், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கத்தின் தலைவர் செல்லத்துரை, பகத்சிங் இரத்ததான கழக செயலாளர் காளிதாஸ், மகாத்மா காந்தி ரத்ததான கழக தலைவர் தாஸ், சூர்யா ரத்ததான கழக தலைவர் சரமாரி, புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் தாவீது ராஜா, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ராஜேஷ் கண்ணா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் லட்சுமணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்