கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கம்பத்தில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-11 15:52 GMT
கம்பம்: 

கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தி செல்வதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மணியன் மற்றும் போலீசார் புறவழிச்சாலையில் ரோந்து சென்றனர். 

அப்போது மணிகட்டி ஆலமரம் பிரிவில் சந்தேகப்படும்படி ஒரு பையுடன் நின்று கொண்டிருந்த 2 வாலிபரை பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டனர். 

அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள், கண்டமனூர் அருகேயுள்ள கணேசபுரத்தை சேர்ந்த கோபிநாத் (வயது 21), சுமன் (36) என்பதும், கேரளாவிற்கு கஞ்சாவை கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்