கயத்தாறு அருகே 3 ஆடுகள், கன்றுக்குட்டி திடீர் சாவு
கயத்தாறு அருகே 3 ஆடுகள், கன்றுக்குட்டி திடீரென இறந்துள்ளன
கயத்தாறு:
கயத்தாறு அருகே நொச்சிகுளம் கிராமத்தில் வடக்கு தெருவைச் சேர்ந்த சிவனனைந்தான் மகன் செல்லையா (வயது 40), இவரது வீட்டின் முன்பு வேப்பமரத்து அடியில் 3 ஆடுகள், 3 பசுங்கன்று குட்டிகளை கட்டிப் போட்டுள்ளார். பின்னர் அவர் வீட்டில் 2 வாளியில் இருந்த தண்ணீரை அவை குடித்துள்ளன. தண்ணீரை குடித்த சில நிமிடங்களில் மூன்று ஆடுகளும், ஒரு கன்றுக்குட்டியும் துடிதுடித்து இறந்து விட்டன. மற்றொரு கன்றுக்குட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை பார்த்த செல்லையா கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.