பழனி முருகன் கோவிலில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம்
பழனி முருகன் கோவிலில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.
பழனி:
தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து அவர் நேற்று தனது குடும்பத்துடன் பழனி வந்தார். பின்னர் மின் இழுவை ரயில் மூலம் மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் மீண்டும் மின் இழுவை ரயில் மூலம் அடிவாரம் வந்தார். அப்போது அவருடன் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.