ஓசூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஓசூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-11 15:33 GMT
ஓசூர்:
ஓசூர் அருகே புனுகன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் அருண் (வயது 22). இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்து வந்தார். இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக அருண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார், வழக்குப்பதிவு செய்து மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்