வனப்பகுதியில் இருந்து பறந்து வந்த மயில் அரசு பஸ்சில் அடிபட்டு சாவு

செங்கம் அருகே வனப்பகுதியில் இருந்து பறந்து வந்த மயில் அரசு பஸ்சில் அடிபட்டு இறந்தது.

Update: 2021-07-11 15:30 GMT
செங்கம்

செங்கம் அருகே வனப்பகுதியில் இருந்து பறந்து வந்த மயில் அரசு பஸ்சில் அடிபட்டு இறந்தது.

செங்கத்தை அருகில் உள்ள மேல்செங்கம் வனப்பகுதியில் மயில், முயல், மான் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. இன்று பிற்பகலில் மயில் ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்தது. அந்த மயில் திடீரென சாலையில் பறந்து சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த அரசு பஸ் மீது மோதியது.

அதில் மயில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. உடனே பஸ்ைச நிறுத்தி, மயிலை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு வரும்போது, வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

 உயிரிழந்த மயிலை பிரேத பரிசோதனை செய்து காட்டுப்பகுதியில் புதைத்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்