தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 9 பேர் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த சதாசிவம் மகன் மகேஷ்ராஜா (வயது 21), தூத்துக்குடி சுனாமிகாலனியை சேர்ந்த செட்டி பெருமாள் மகன் கர்ணன் என்ற பாம்புகர்ணன் (21), கோமஸ்புரத்தை சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து (36), செல்வக்குமார் என்ற மாரியப்பன் (20), முருகன் மகன் சஞ்சய்குமார் (21), முத்தையாபுரம் தங்கமணி நகரை சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் காளிமுத்து (21), குமாரவேல் மகன் விக்னேஷ் (21), தூத்துக்குடி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த நடராஜன் மகன் ரகு (35), செல்லம் மகன் லிங்கம் (52) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.