கோவில்பட்டியில் பழக்கடைக்காரர் வீடுபுகுந்து 4 பவுன் நகை திருட்டு
கோவில்பட்டி அருகே பழக்கடைக்காரர் வீடு புகுந்து 4 பவுன் நகை திருடப்பட்டது
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்துள்ள புதுஅப்பனேரி கஜேந்திர வரதர் நகரில் குடியிருப்பவர் ரெங்கசாமி மகன் திருவேங்கட ராமானுஜம் (வயது 60). இவர் இளையரசனேந்தல் ரோட்டில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டி விட்டு அவர் தனது மனைவியுடன் கடைக்கு சென்று விட்டு இரவு 9 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் பூட்டு உடைக்கப் பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் வைத்திருந்த 4 பவுன் நகை மற்றும் 50 கிராம் வெள்ளி கொடி திருட்டு போயிருந்தது. இந்த துணிகர திருட்டு குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.