பொதுமக்கள் எதிர்ப்பு
குடிமங்கலம் அருகே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
குடிமங்கலம்
குடிமங்கலம் அருகே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
கோழிப்பண்ணை
குடிமங்கலம் அருகே கோழிப்பண்ணை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆமந்தகடவு ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட அம்மாபட்டி கிராமத்தில் 2 ஆயிரத்து 500 பேர் வசித்து வருகிறோம். இந்த நிலையில் அரசு பள்ளி, ஆதிதிராவிடர் குடியிருப்பு மற்றும் ஆவின்பால் நிலையத்துக்கு அருகில் சிலர் அனுமதி இன்றி கோழிப்பண்ணை அமைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஆமந்தகடவு ஊராட்சியை அணுகியபோது ஊராட்சி மன்ற கூட்டத்தில் ஊர் குடியிருப்பில் இருந்து 500 மீட்டருக்கு பின்னர்தான் கோழிப்பண்ணை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
சுகாதார சீர்கேடு
கோழிப்பண்ணை சம்பந்தமாக தாசில்தார், குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை அணுகி மனு அளித்துள்ளோம். குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து விசாரணை நடத்திய பின்பும் தொடர்ந்து கோழிப்பண்ணை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் கோழிப்பண்ணை அமைத்தால் கோழிப்பண்ணையில் இருந்து துர்நாற்றம் வீசும். தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கோழிப்பண்ணையில் இருந்து உற்பத்தியாகும் ஈக்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டும் நிலை உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிக்கு அருகில் கோழிப்பண்ணை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
----