7 அடி நீள பாம்பு பிடிபட்டது

வந்தவாசி அருகே 7 அடி நீள பாம்பு பிடிபட்டது.

Update: 2021-07-11 11:32 GMT
வந்தவாசி
வந்தவாசி அருகே 7 அடி நீள பாம்பு பிடிபட்டது. 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அம்மையப்பட்டு கிராமத்தில் உள்ள கோழிக்கடையில் வேலை பார்த்து வருபவர் குலாப்ஜான். 

இவரின் வீட்டில் பாம்பு ஒன்று புகுந்து சமையலறையில் சுருண்டு கிடந்தது. பாம்பை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், வந்்தவாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

நிலைய அலுவலர் குப்புராஜ் தலைமையில் தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து கோணிப்பையில் போட்டு கட்டி எடுத்துச் சென்று அருகில் உள்ள காப்புக் காட்டில் விட்டனர்.

மேலும் செய்திகள்