கொள்ளிடத்தில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்றவர் கைது

கொள்ளிடத்தில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-11 10:58 GMT
கொள்ளிடம், 

கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் ஆகியோர் நேற்று அதிகாலை கொள்ளிடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது கொள்ளிடம் புலிஈஸ்வரி அம்மன் கோவில் எதிரே சிதம்பரம்- சீர்காழி சாலை ஓரத்தில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவில் முன் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்து கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் சீர்காழியை அடுத்த மணல்மேடு பட்டவர்த்தி பகுதியை சேர்ந்த முருகன் (வயது35) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்