காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு சுவரொட்டி வெளியீடு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் அறிமுக நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் மற்றும் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலர் சங்கீதா ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு சுவரொட்டிகளை வெளியிட்டனர். இந்த சுவரொட்டியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவசர உதவிக்கு 1098 என்ற எண்ணையும், பெண்களுக்கான அவசர உதவிக்கு 181 மற்றும் போலீஸ் துறைக்கு 100 என்ற இலவச தொலைபேசி எண்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
கேட்டுகொண்டார்.