ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி,
திருச்சி கட்டான்பாறை பகுதியை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா (வயது 35). சில மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்துள்ளார். இதனால் மனவேதனையில் காணப்பட்டார். நேற்று அதிகாலை திருச்சி டவுன் ரெயில்வே நிலையத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அப்போது அந்த வழியாக வந்த முரளிகிருஷ்ணா திடீரென்று ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முரளி கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் திருச்சி மணப்பாறை சேர்ந்த சவரிமுத்து (70). இவர் மணப்பாறையில் இருந்து செட்டியபட்டி இடையில் உள்ள தண்டவாள பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.