கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம்

Update: 2021-07-10 22:45 GMT
அழகர்கோவில்
மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா சிறப்பு தடுப்பூசிகள் செலுத்தும் முகாம் நடந்தது. இதை கோவில் துணை ஆணையரும், செயல் அலுவலருமான அனிதா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் கோவில் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பொது சுகாதார துறை, மருத்துவ துறை அலுவலர்கள், நோய்தடுப்பு துறை மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்