சேலத்தில் 80 பவுன் நகை, ரூ.45 லட்சத்துடன் மாயமான பெண்
சேலத்தில் 80 பவுன், ரூ.45 லட்சத்தை எடுத்துக்கொண்டு குழந்தைகளுடன் பெண் மாயமானார். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
சேலம்:
சேலத்தில் 80 பவுன், ரூ.45 லட்சத்தை எடுத்துக்கொண்டு குழந்தைகளுடன் பெண் மாயமானார். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குழந்தைகளுடன் மாயம்
சேலம் சின்னதிருப்பதி கம்பர் தெருவை சேர்ந்தவர் சீதாலட்சுமி (வயது 79). இவர் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகள் ருக்குமணி பிரியா (வயது 45). இவருடைய கணவர் கிருஷ்ணகுமார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு பிரீத்திலட்சுமி (14), முகுந்தகாஸ் (10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். எனது மகள் ருக்குமணி பிரியா மற்றும் பேரக்குழந்தைகள் என்னுடன் வசித்து வந்தனர்.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு எனது மகள், குழந்தைகளுடன் திடீரென மாயமானார். அவர் வீட்டை விட்டு செல்லும் போது, வீட்டில் இருந்த 80 பவுன் நகை, ரூ.45 லட்சம் மற்றும் வீட்டு மனை பத்திரங்கள் ஆகியவற்றை எடுத்து சென்று விட்டார்.
மாயமானவர்களை பல இடங்களில் தேடி பாார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. எனவே காணாமல் போன மகள் மற்றும் பேரக்குழந்தைகளை கண்டுபிடித்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
இந்த புகாரின்பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகள், நகை, பணத்துடன் மாயமான ருக்குமணி பிரியாவை தேடி வருகின்றனர்.