கொங்கணாபுரத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம் நடந்தது.;
எடப்பாடி:
கொங்கணாபுரத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம் நடந்தது.
ரூ.1½ கோடிக்கு...
கொங்கணாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கம் உள்ளது. இங்கு நேற்று பருத்தி ஏலம் நடந்தது. சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த பருத்தியை மூட்டைகளாக கட்டி விற்பனையாக கொண்டு வந்து குவித்து வைத்திருந்தனர்.
இதனை சேலம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு எடுத்து சென்றனர். ஏலத்தில் பி.டி. ரக பருத்தி ஒரு குவிண்டால் (நூறு கிலோ) ரூ.6 ஆயிரத்து 450 முதல் ரூ.7 ஆயிரத்து 351 வரையும், சுரபி ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 500 முதல் ரூ.9 ஆயிரத்து 119 வரையும் விற்பனையானது. மொத்தம் 6 ஆயிரம் மூட்டை பருத்தி ரூ.1½ கோடிக்கு ஏலம் போனது.
எள் ஏலம்
இதைத்தொடர்ந்து நடந்த எள் ஏலத்தில் சிவப்பு எள் ஒரு கிலோ ரூ.77 முதல் 93 வரையும், வெள்ளை எள் ஒரு கிலோ 77 முதல் 96.60 வரையும் ஏலம் போனது. மொத்தம் 100 மூட்டை எள் ரூ.9 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.