சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் இன்று ரத்து-கலெக்டர் கார்மேகம் தகவல்
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. இதனிடையே சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி மருந்து கையிருப்பு இல்லை. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து மையங்களிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசி போடும் முகாம் ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.