தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டியவர் கைது
உடையாம்பாளையத்தில் தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
கோவை
கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய நண்பர் சூர்யாவிற்கும், பீளமேடுபுதூரை சேர்ந்த செல்வா (25) என்பவருக்கும் கிரிக்கெட் விளையாடும் போது தகராறு ஏற்பட்டது.
இதை அறிந்த கார்த்திக், செல்வாவை தாக்கியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வா தனது நண்பர்களுடன் சென்று, மாரியம்மன் கோவில் வீதி அருகே நின்று கொண்டிருந்த கார்த்திக்கின் கையை அரிவாளால் வெட்டினர்.
இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வாவின் நண்பரான பீளமேடுபுதூரை சேர்ந்த அரவிந்த் (20) என்பவரை கைது செய்தனர். செல்வா, நந்தா, ஜெயா, குமார், பிரவீண், மனோஜ், கென்டி ஆகிய 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.