சாலையில் விழுந்த புளியமரத்தை அகற்றிய போலீசார்

சாலையில் விழுந்த புளியமரத்தை போலீசார் அகற்றினர்.

Update: 2021-07-10 20:55 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் அன்னமங்கலம் பிரிவு பாதை அருகே நேற்று வீசிய சூறாவளி காற்றில் புளியமரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த புளியமரத்தை பொதுமக்களின் உதவியுடன் உடனடியாக அப்புறப்படுத்தினார்கள். பின்னர் சிறிது நேரத்தில் போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்