கொரோனாவுக்கு 2 பேர் பலி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த தலா 65 வயதுடைய முதியவர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 12 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
தற்போது 174 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 740 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் 2-வது நாளாக நேற்று யாருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.