விபத்தில் மாற்றுத்திறனாளி பலி

திருச்சுழி அருகே விபத்தில் மாற்றுத்திறனாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-07-10 20:47 GMT
காரியாபட்டி, 
திருச்சுழி அருகே எம்.புளியங்குளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 28). மாற்றுத்திறனாளியான இவர்  திருச்சுழி அருகே மேல கண்டமங்கலத்திலுள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வேலை முடிந்து தனது வீட்டிற்கு மூன்று சக்கரமோட்டார் சைக்கிளில் திருச்சுழி மருத்துவர் காலனி அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த முத்துப்பாண்டியை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர்  மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்