புதிதாக 35 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,049 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44,053 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 36 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 499 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாக வில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் 239 பேரும், சிகிச்சை மையங்களில் 11 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் பாண்டியன் நகர், என்.ஜி.ஓ. காலனி, சூலக்கரை, காரியாபட்டி, குல்லூர்சந்தை, பாலவனத்தம், முதலிப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட பட்டியலில் 10 பேருக்கும், மாநிலப் பட்டியலில் 35 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 1 ஆகும்.